1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay took action for the actor muththukkalai

உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை!. உடனே நடவடிக்கை எடுத்த விஜய்!..

muthukalai
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக மாறியிருக்கிறார். எம்,ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின் திரைத் துறையிலிருந்து வந்த முதல்வராக விஜய் இருக்கிறார். இது திரையுலகிலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

எனவே திரைத்துறை தொடர்பான பல கோரிக்கைகளை திரைத்துறையை சார்ந்த பல சங்கங்கள் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள்.. சமீபத்தில் கூட நடிகர் சங்க உறுப்பினர்கள் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் இயக்குனர் விக்ரமன் இயக்குனர் சங்கம் சார்பாக அவரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார்.

ஒருபக்கம் காமெடி நடிகர் முத்துக்காளை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி உயிருக்கு போராடி வருவதாகவும், அவருக்கு மேல் சிகிச்சைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட வேண்டும் எனவும் கூறி கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து முதல்வர் விஜய் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முத்துக்காளையிடம் தொலைபேசியில் பேச வைத்திருக்கிறார். அதன்பின் அமைச்சர் ராஜ்மோகனை நேரடியாக அனுப்பி நலம் விசாரித்து உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதையடுத்து முதல்வர் விஜய்க்கும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ் மோகனுக்கு முத்துக்காளை நன்றி தெரிவித்திருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
நீட் முறைகேடு அதிர்ச்சி: வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த புனே பெண் பேராசிரியை சிபிஐ-யால் கைது