முதல்வர் விஜய்க்கு 17 துறை ஒதுக்கீடு!.... வெளியான அமைச்சரவை பட்டியல்!..
தவெக ஆட்சி அமைந்து 6 நாட்கள் ஆகியும் இதுவரை அமைச்சரவை பட்டியல் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக பல அரசு கோப்புகள் முடங்கி கிடந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான பட்டியலை ஆளுநர் ஆர்லேக்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதன்படி முதல்வர் விஜய்க்கு 17 துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது காவல்துறை, உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட 17 துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், கீர்த்தனாவுக்கு தொழில்துறையும், டி.கே பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அருண் ராஜுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும், வெங்கட்ரமணனுக்கு உணவுத் துறையும்,ராஜ்மோகனுக்கு பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழர் வளர்ச்சி செய்தி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.