1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. tk sivakumar says helicopeter is ready for vijay

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

shivakumar vijay
ஒவ்வொரு வருடமும் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுப்பதும், தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி அதை பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார்.

ஆனாலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவோம் எனவும் கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல விரும்பாத முதல்வர் விஜய் கர்நாடகா முதல்வர் டி.கே சிவகுமாரை நேரில் சந்தித்து இது தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டி.கே.செல்வகுமார் ‘விஜய் என்னை சந்திக்க விரும்புவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. தமிழக தலைமைச் செயலாளரும் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வர் விஜயுடன் நான் தொலைபேசியிலும் பேசினேன்.. கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிடவும் அவருக்கு நான் கோரிக்கை வைத்திருக்கிறேன்..

கர்நாடகத்திற்கு வரும் விஜயை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்க நான் காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்கவும், மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை விஜய் பார்வையிடுவதற்கு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருக்கிறது’ எனவும் அவர் கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஓட்டுக்குதான் அம்பேத்கர்!. இனிமே விஜய்க்கு தேவையில்ல!.. த.வா.க வேல் முருகன் கோபம்!...