1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Who Will Lead DMK in the Future Survey Results

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

தமிழ்நாடு அரசியல்
திமுகவின் எதிர்கால தலைமை யார் என்ற கேள்வி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எப்போதுமே ஒரு ஹாட் டாபிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபல முன்னணி ஊடகம் ஒன்று நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் பொதுமக்களும் தொண்டர்களும் தங்களது தெளிவான விருப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
 
வெளியான சர்வே முடிவுகளின்படி, திமுகவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல கனிமொழி பொருத்தமானவர் என்று 40 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த வேண்டும் என்று 27 சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்த இருவரில் யாருமே இல்லை என்று 27 சதவீதத்தினரும், தங்களது கருத்தைக் கூற விரும்பவில்லை என்று 6 சதவீத மக்களும் தெரிவித்துள்ளனர்.
 
கனிமொழிக்குக் கிடைத்துள்ள இந்த எதிர்பாராத அதிகமான ஆதரவு, கட்சிக்குள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நற்பெயரை காட்டுகிறது. மூத்த தலைவர்களின் அனுபவமும், அமைதியான அணுகுமுறையும் அவரை முதலிடத்தில் அமர செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 
 
அதேவேளையில், உதயநிதியின் தீவிரமான களப்பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்த தலைமையை ஏற்கும் விவகாரத்தில் கனிமொழியின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இந்த சர்வே முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...