1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (12:23 IST)

அரசே மக்களை இப்படி செய்கிறதே! – இயக்குனர் அமீர் வேதனை!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே மக்களை வேதனைக்கு உள்ளாக்குவதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தினால் ஏற்பட்டுள்ள போராட்டங்களும், கலவரங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி கலவரம் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருமுருகன் காந்தி, அமீர் மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அமீர் ”டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கலாம் என சிலர் கூறுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களை இப்படி வேதனைப்படுத்துவது வேதனையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன் சிஏஏ, என்.ஆர்.சி போன்றவை முஸ்லிம்களை மட்டுமல்ல அனைத்து மக்களையுமே பாதிக்கக்கூடிய ஒன்று என பேசியுள்ளார்.