1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (11:41 IST)

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை! – அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!

மதுரை மீன் சந்தையில் விற்கப்பட்ட ரசாயனம் கலந்த மீன்களை அதிகாரிகள் டன் கணக்கில் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள கரிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்ய 15க்கும் மேற்பட்ட உணவுத்துறை அதிகாரிகள் கரிமேட்டில் உள்ள மீன்சந்தையில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்மலின் எனப்படும் அந்த ரசாயனம் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும், பொலிவை தருவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ரசாயனம் தடவப்பட்ட 5 டன் மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். மீண்டும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.