வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2026 (16:43 IST)

தவெக கதை முடிஞ்சிப் போச்சி!.. திமுக 200 தொகுதிகளில் வெற்றி!.. தமீமுன் அன்சாரி பேட்டி...

vijay stalin
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிவந்தார். அதுவும் சமீப காலமாக திமுக ஒரு தீய சக்தி என எல்லா மேடைகளிலும் பேசுகிறார். இது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விஜயை அவர்களும் பதிலுக்கு திட்டி வருகிறார்கள்.. ‘கரூரில் அவரைப் பார்க்க வந்த மக்கள் உயிரிழந்த போது கூட அதை பார்க்காமல் அங்கிருந்து ஓடிப்போனவர்தான் விஜய்.. இவருக்கு மற்ற கட்சிகளை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?’ என அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒருபக்கம் அதிமுகவை ஊழல் கட்சி.. பாஜகவின் அடிமையாக இருக்கிறது என விஜய் பேச தற்போது அதிமுகவும் விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கியிருக்கிறது. இந்நிலையில்தான் விஜயின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார்..

அதோடு விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.. நடிகையோடு விஜய்க்கு தொடர்பு என அவரின் மனைவியே சொன்னது கண்டிப்பாக விஜயின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்.. வாக்குகள் கூட குறையும் என சிலர் சொல்கிறார்கள்.. சிலரோ அதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி ‘முதல்வர் கடந்த கால வேறுபாடுகளை எல்லாம் மறந்து பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்.. திமுக கூட்டணி 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும், 34 தொகுதிகளில் கூட எதிர்க்கட்சிகள் வெல்வது கடினம்.. திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொன்ன கருத்து நேற்று மாலை 5 மணியோடு முடிந்து விட்டது’ என கூறியிருக்கிறார்