1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actress kushboo comment about vijay divorce issue

அரசியல்வாதிங்களும் மனுஷங்கதான்!.. விஜய் விவகாரத்து பற்றி கருத்து சொன்ன குஷ்பு!...

kusbu vijay
நடிகர் விஜய் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து அவரின் தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கவுள்ள நிலையில் அவரின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டிருப்பதோடு, விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என கொளுத்தி போட்டிருக்கிறார்..

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் வட்டாரத்திலும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று மாலை இந்த செய்தி வெளியானது முதலே சமூகவலைத்தளங்களில் இந்த விஷயத்தை பற்றி பலரும் கருத்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.

குறிப்பாக, விஜயின் தீவிர ரசிகர்களும், விசுவாசிகளும் இதற்கு பின்னால் அரசியல் சதி இருக்கிறது.. நாங்கள் விஜய்க்கு ஆதரவாக நிற்போம் என்கிறார்கள்.. மற்றவர்கள் விஜயை விமர்சிக்கிறார்கள்.. ஒருபக்கம் இந்த சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் எனவும் சிலர் சொல்கிறார்கள்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு ‘ஒருவரின் சொந்த வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது பார்ப்பதற்கு நமக்கு உரிமை இல்லை.. அரசியல் என்பது பொது சேவை.. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை அவங்களோட பிரைவசி.. நான்கு சுவர்களுக்குள் நடக்கிற விஷயங்களை தெருவுக்கு கொண்டு வந்து பேசுவது எந்த விதத்தில் நியாயம்? தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலோடு ஒப்பீடு செய்யக்கூடாது’ எனக் கூறியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தவெக கதை முடிஞ்சிப் போச்சி!.. திமுக 200 தொகுதிகளில் வெற்றி!.. தமீமுன் அன்சாரி பேட்டி...