1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. pt selvakumar talk about sangee tha vijay aligations

விஜயை நம்பி வந்த பொண்ணு!.. சில சனியன் சகடை வாழ்க்கையில் வந்தாங்க!.. விஜயின் மேனேஜர் பேட்டி!...

vijay sangeetha
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கணவரிடமிருந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதோடு, விஜய்க்கு ஒரு நடிகையிடம் தொடர்பு இருப்பதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த 5 வருடங்களுக்கும் மேல் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அது பற்றி கேட்டபோது தன்னை விஜய் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், நடிகை விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்தபோது எனக்கும், என் குழந்தைகளுக்கும் அவமானமாக இருந்தது. என் குழந்தைகளின் எதிர்காலம் கருதியே இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்தேன். இப்போது வேறு வழியில்லை என்பதால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், விஜயிடம் பல வருடங்கள் மேனேஜராக இருந்தவரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான பிடி செல்வக்குமார் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்தபோது ‘சங்கீதா அமைதியான பெண்.. மிகவும் நம்பிக்கையோடு விஜயை நம்பி வாழவந்தவர். எப்போதும் என்னை அண்ணா அண்ணா என அழைப்பார். விஜய் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை. ஆரம்பத்தில் அவர்களின் வாழ்க்கை நன்றாகவே போனது. சில சனியன் சகடைகள் அவர்கள் வாழ்வில் வந்தார்கள்.

விஜயின் பெற்றோர் 60ம் கல்யாணம் செய்துகொண்டபோது அனாதை போல அந்த நிகழ்ச்சி தனியாக நடந்தது. விஜய் யாருக்கும் உண்மையாக இருக்கமாட்டார். விஜய் தன்னிடம் பல வருடங்கள் வேலை செய்த யாருக்கும் எந்த உதவியும் செய்தது இல்லை.. தவறுகள் செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும். நான் பெரிய ஆள்.. என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற ஆணவ போதை விஜய்க்கு. எந்த உச்சத்தில் இருந்தாலும் கீழே வந்துதான் ஆகவேண்டும்’ என பேசியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இஸ்ரேல் தாக்கியதில் ஈரானில் 40 மாணவிகள் உயிரிழப்பு!..