1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Summer season hot increased double compare than before year

கோடை வெயில் இரண்டு மடங்கு இருக்கும்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பிப்ரவரி மாதம் இறுதியை எட்டியுள்ள நிலையில் இப்போதே வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடைகாலம் இந்த ஆண்டு வழக்கத்தை விட கொஞ்சம் முன்னரே தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கோடைக்காலத்தின்போது வெயிலும், அனல் காற்றும் மக்களை பெரிதும் பாதித்தன. வட மாநிலங்களில் வெப்ப காற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை கால வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் பாதியிலேயே தொடங்கும் கோடை காலமானது உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரகாண்ட், ஒடிஷா போன்ற பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை!