திமுக, அதிமுக தலைவர்களை கைது செய்வோம் என மிரட்டலாமா?.. விசிக பொதுச்செயலாளர் கோபம்!...
தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் மட்டும் தேவை. விசிக மட்டுமே இன்னும் முடிவை சொல்லாமல் இருக்கிறது. இந்நிலையில்தான் விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் பரபரப்பான கருத்துக்களை கூறி வருகிறார்..
ஏற்கனவே பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தவுடன் விஜய் தற்போது யாரிடமெல்லாம் ஆதரவை கேட்கிறாரோ அந்த கட்சி கூட்டணி தலைவர்களை நேரில் சந்தித்து பேசியிருக்க வேண்டும். விஜய்க்குள்ள கரிஷ்மாவை, அவரின் நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்துவிட்டு அவரிடம் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக் கொள்ள விஜயை பயன்படுத்துகிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடனேயே திமுக, அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சம் அல்லவா!.. விசிக கட்சியின் தலைவர் திருமாவுடன் 20 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.. மற்றவர்கள் எல்லாம் நம்முடைய ஆட்கள்தான்.. ஸ்லீப்பர் செல்லாக அங்கே இருக்கிறார்கள் என பேசுவது என்ன வகை அரசியல் அறம்? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்..
இன்று காலை நடந்த தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் இந்த கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது