1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister sengottaiyan is admitted in hospital

செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!.. திடீர்னு என்னாச்சி?..

sengottaiyan
அதிமுகவில் பல வருடங்கள் பயணித்தவர் செங்கோட்டையன். அதிமுகவில் பலமுறை எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் யார் அடுத்த முதலமைச்சர் என்கிற பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இருந்தது. ஆனால், கூவத்தூரில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார்.

ஒருகட்டத்தில் அதிமுகவிலிருந்து வெளியேறிய அல்லது விலக்கி வைக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா போன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் அதிமுகவிலிருந்து அவரை பழனிச்சாமிநீக்கினார். இதையடுத்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில்இணைந்தார் செங்கோட்டையன்..

அதோடு கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் செங்கோட்டையன் வருவாய் துறை அமைச்சராக மாறியிருக்கிறார். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செங்கோட்டையன் திடீரென அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் காரணமாக அங்கு அவர் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
திமுகவின் வன்மம் இதுதான்!.. தவெக ஆட்சி தொடரும்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி...