1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi attack cm vijay on dmk meeting

இல்லாத எதிரி கூட சண்ட செஞ்சிட்டோம்!. நாங்க பண்ண தப்பு!.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

udhyanidhi
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் பல வருடங்களுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி மலர்ந்திருக்கிறது. ஏனெனில் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளது. 
 
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வந்தார். நக்கலடித்தும் பேசினார். ஆனால் திமுகவோ விஜயின் பெயரை கூட சொல்லாமல் மறைமுகமாக அவரை விமர்சித்து விட்டு கடந்து சென்றது..
 
ஆனால் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் இப்படிப்பட்ட வரவேற்பை கொடுப்பார்கள் என திமுக எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில்தான் நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘நடந்து முடிந்த அரசியல் மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களும் எதிர்பார்க்கவில்லை.. முதல்வரே அதை எதிர்பார்க்கவில்லை.  கவர்ச்சியில் வெற்றி பெற்றார் என்று சொன்னால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது.. வேறு எதை கட்டி அவர் வெற்றி பெற்றார்? அவர் என்ன எல்லா தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்தாரா? கொள்கைகளை முன்வைத்து அரசியல் செய்தாரா?.. எதுவுமே இல்லை.. 
 
களத்தில் யார் உண்மையான எதிரி என்று தெரியாமல் இல்லாத எதிரியோடு நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். அதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். மக்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்து விட்டோம். தமிழ்நாடு முழுவதும் தெருத்தெருவாக வாக்கு கேட்ட நாம் வீடுகளில் கேட்க தவறிவிட்டோம்.. நம்முடைய வீடுகளில் நம் சாதனைகளை சொல்ல மறந்து விட்டோம்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
குழந்தையை சாக்குப் பையால் மூடிய அங்கன்வாடி பணியாளர் கைது!.. தென்காசியில் அதிர்ச்சி..