தொடர்புடைய செய்திகள்
- முக ஸ்டாலின் தோல்வி!. கோவில்களில் வேண்டுதல் வைக்கும் துர்கா ஸ்டாலின்!...
- குண்டு வெடிக்கும் என 1000 இமெயில் அனுப்பியவர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
- 20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!
- திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!
- கருணாநிதி பிறந்த நாளில் கொடிக்கம்பம்.. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.. இருவர் காயம்..
முன்னாள் எம்.எல்.ஏ காலில் விழுந்து ஆசி பெற்ற துர்கா ஸ்டாலின்.. வைரல் வீடியோ
முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளார். மடிகேரியிலிருந்து சென்னை திரும்பும் வழியில் மைசூரு வந்த அவர், தனது சகோதரி ஜெயந்தி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனின் மனைவி இந்திரா ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டுள்ளார்.
கோவில் வழிபாட்டிற்குப் பிறகு, துர்கா ஸ்டாலின் முன்னாள் அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ஜி.டி.தேவகவுடாவின் இல்லத்திற்கு விசிட் செய்துள்ளார். தேவகவுடாவின் மகள் அண்ணபூரணி, ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால், அவரது அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் துர்கா ஸ்டாலின், அவர்களுடைய காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது ஜி.டி.தேவகவுடா மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த சில நாட்களாக குடகு பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த ஸ்டாலின் குடும்பத்தினர், மடிகேரியிலிருந்து மைசூரு வழியாக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. துர்கா ஸ்டாலினின் இந்த ஆன்மீகப் பயணம் மற்றும் அரசியல் கடந்த நட்பு ரீதியிலான சந்திப்பு தற்பொழுது ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
Edited by Siva
Durga Stalin, wife of Tamil Nadus former CM MK Stalin, visited Mysores Chamundeshwari Temple and then went to Karnataka MLA GT Deve Gowdas residence. She bowed at his feet and paid her respects, beautifully embodying the Sanatana Dharma values of humility, reverence for… pic.twitter.com/o5sKquOxr3
— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) June 3, 2026
