1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk supporters compair mgr with vijay

வரலாறு திரும்புகிறதா?!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கூட்டம் விஜய்க்கு!.. ஸ்தம்பித்து போன தூத்துக்குடி...

tvk vijay
vijay

தவெக தலைவர் விஜய் நேற்று தூத்துக்குடிக்கு சென்றிருந்தபோது கூடிய கூட்டம்தான் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நேற்று மதியம் 12 மணி அளவில் திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார்.

vijay
அதன்பின் அங்கிருந்து சாலை வழியாக தூத்துக்குடி சென்றார். அங்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இவரை பார்ப்பதற்காக கூட்டம் கூடி நின்றது. மக்கள் வெள்ளம், மக்கள் அலை என்றெல்லாம் சொல்வார்களே அப்படி கூட்டம் கூடி நின்றது. பெருங்கூட்டம் நின்றதால் அதைப்பார்த்து விஜய் கண்ணீரை விட்டார்..
vijay

அதன்மேல் பாதுகாப்பு கரணம் கருதி அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விஜய் பிரச்சாரம் செய்யாமல் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் தனது கைகளை மட்டும் காட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

vijay

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது அவர் திருநெல்வேலிக்கு பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது எப்படி மக்கள் கூடினார்களோ அதன்பின் பல வருடங்களுக்கு அடுத்து இப்போதுதான் ஒருவருக்கு இப்படி ஒரு கூட்டம் கூடியிருக்கிறது என பலரும் சொல்லி வருகிறார்கள். பலரும் எம்ஜிஆர் அப்போது பிரச்சாரம் செய்த புகைப்படத்தோடு விஜயின் தூத்துக்குடி பிரச்சாரம் தொடர்பான புகைப்படங்களை ஒப்பிட்டு ‘வரலாறு திரும்புகிறது’ எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

About Writer
BALA