என்னை தடுக்க 3 பிளான் போட்டாங்க!... ஆனா நடக்கல!.. நெல்லையில் தெறிக்கவிட்ட விஜய்..
இப்போது முதல்வர் ஸ்டாலின் அதிகாரமில்லாத முதல்வராக இருக்கிறார்.. அதிகாரம் மட்டும் அவரின் கையில் இருந்திருந்தால் இந்த பொதுக்கூட்டம் நடந்திருக்காது.. எதையாவது கட்டுப்பாடுகளை விதித்து இதை நடக்க விடாமல் செய்திருப்பார்.. இதுதான் திமுக ஆட்சி..
திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியே வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம்.. ஆனால் உள்ளுக்குள் இரண்டு பேரும் ஒன்றுதான்.. இரண்டு பேருக்கும் ஒரே நோக்கம்தான்.. மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்து விடக்கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.. ஏனெனில் நான் வந்ததில் இருந்து அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போய்விட்டது.. அதனால் என் மீது செம கோபத்தில் இருக்கிறார்கள்.
முதலில் கரூர் சம்பவத்தில் என் மீது பழி போட்டார்கள்.. ஆனால் மக்கள் எனக்கு ஆதரவாக இருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டு அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்தார்கள்.. என் ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள்.. அதை யார் செய்தார்கள் என்று உங்களுக்கே தெரியும்.. ஆனால் என்னடா இவன் படத்தையே முடக்கிவிட்டோம். இவன் இதை கண்டுகொள்ளாமல் மற்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறானே என ஆச்சர்யப்பட்டார்கள்.. மூன்றாவதாக என்னை சுற்றி இருப்பவர்களை வைத்து தேர்தல் நேரத்தில் நெருக்கடியை கொடுத்தார்கள்.. அது என்னவென்று உங்களுக்கே தெரியும்..
எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறேன்.
திமுக நிர்வாகி ஒருத்தன் இரண்டு வயது குழந்தையை கொன்றான்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்?.. நாங்குநேரியில் கழிப்பறை வசதி இல்லாமல் காட்டுப்பாக்கம் ஒதுங்கிய பள்ளி மாணவியை ஒருவன் கொன்றான்.. கேட்டால் அது போதையில் செய்தது என்கிறார்கள்.. போதை மருந்தை தடுக்காமல் விட்டது யார்? அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்..
திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போயிருக்கிறது.. ஸ்டாலின் சார் தனது கல்லாப்பெட்டி கூட்டணியை ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார்.. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளே ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள்.. சில கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸ் தனது கூட்டணியில் முக ஸ்டாலின் சேர்த்துக்கொண்டார்.. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம்தான் இருக்கிறது..
இந்த முறை தவெகவின் ஆட்சி அமையும்.. எல்லோரும் நன்றாக இருப்போம்.. ஏப்ரல் 2ஆம் தேதி காலை வீட்டில் இருக்கும் சாமியை விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள். செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. ஆனால் சொன்னதை செய்வோம்.. மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை.. நேர்மையான ஆட்சியை கொடுப்பேன்.. மற்றவர்களை போல பொய் சொல்லி மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று விஜய் பேசியிருக்கிறார்.