திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (19:15 IST)

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

eps vijay
விஜயின் தவெக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் வேட்பு மனு தாக்கலில் பல குளறுபடிகள் நடந்தது. விஜய், ஆதாவ் அர்ஜுனா மற்றும் சில தவெக வேட்பாளர்களின் வேட்புமனுவில் குளறுபடிகள் நடந்தது. எப்படியோ ஒரு வழியாக  இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டது..

இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி  தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்யாததால் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளர் நித்யாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் யாரும் போட்டியிடவில்லை. இதன் காரணமாக 234ஆக இருந்த தவெக வேட்பாளர்கலின் எண்ணிக்கை 233-ஆக குறைந்திருக்கிறது..

வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கூறியதும் வேட்பாளர் அருண்குமாரை கொண்டு வந்து வேட்புமனுவை சரியாக நிரப்ப தவெகவினர் திட்டமிட்டனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. எனவே அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டும்.. இதற்கு பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது என தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.