கூலிங் கிளாஸ்.. கையில் தவெக கிடார்!.. வைரலாகும் விஜய் பிரச்சார புகைப்படங்கள்!..
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விஜய் அடிப்படையில் ஒரு நடிகராக இருப்பதால் நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்படுகிறார். 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்தவர் என்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் உண்டு.
குறிப்பாக பல இளைஞர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் முதல் நிலை வாக்காளர்களின் ஓட்டுக்கள் விஜய்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அவர்களை நம்பித்தான் விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டுயிட்டுள்ளார்.
விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெங்கும் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று திருநெல்வேலியில் நடந்த தவெக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் திமுகவுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக பேசினார். அதன்பின் அதே ஊரில் அவர் ரோட் ஷோவும் நடத்தினார்..
அப்போது ரசிகர் ஒருவர் கொடுத்த கூலிங் கிளாசை விஜய் அணிந்து கொண்டார்.. அதேபோல் ரசிகர் ஒருவரின் குழந்தையை தூக்கி தோள் மேல் உட்கார வைத்துக் கொண்டார். மேலும், தவெக கொடி கலரில் உருவாக்கப்பட்ட இந்த கிடாரை விஜய்க்கு பரிசாக கொடுத்தார் அதையும் வாங்கி வாசிப்பது போல போஸ் கொடுத்தார் விஜய் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.