1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. KS Alagiri Supports Arrest of DMK MLA Markandeyan for Controversial Speech Against CM

கைது செய்தது சரிதான்.. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ கைது குறித்து அழகிரி...

கே.எஸ்.அழகிரி
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் சர்ச்சை பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் குறித்து அவதூறாகவும், எலும்பை உடைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்த விவகாரத்தில், அவர் கைது செய்யப்பட்டது முற்றிலும் சரியான நடவடிக்கையே என்று அவர் ஆதரவு தெரிவித்தார். இது கருத்து சுதந்திரம் ஆகாது என்றும், ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ரௌடியை போல பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.
 
மேலும், இதுபோன்ற வன்முறை பேச்சுக்களுக்கு திமுக தலைமை உடனடியாக மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும் அழகிரி வலியுறுத்தினார். 
 
அரசியல் நாகரிகத்தை மீறி மிரட்டல் விடுக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற மிரட்டல்களுக்கு இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்திய அவரது இந்த பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முதல் ஆலோசனை கூட்டம்.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தீவிரம்...