1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin Slams TVK Government Over Raids And Arrests Of Opposition Leaders

டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்' என மக்கள் ஓட்டும் இந்த வெற்று ரீல்ஸ் ஆட்சி: தவெக அரசை விமர்சித்த முக ஸ்டாலின்

mk stalin
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிரடியான அறிக்கை ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.
 
அவர் தனது பதிவில், "போதைப்பொருள் பயன்படுத்தியது போல் சுவரொட்டிகள் மற்றும் 'Thug Life' ஸ்டோரி போட்ட அமைச்சருக்கு எதிராக நியாயமாக போராடிய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
புதிய அரசின் ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டிலும் திட்டமிட்டு ரெய்டு நடத்தப்பட்டுள்ளது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார்.
 
மேலும், "இப்படித் தன்னை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து மிரட்டியும், ஊடகங்களின் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தனது போலி பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் முதலமைச்சரின் இந்த எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது. 
 
அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் விரைவில் அடங்கும். 'டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்' என மக்கள் ஓட்டும் இந்த வெற்று ரீல்ஸ் ஆட்சிக்கு, வெகுவிரைவில் மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று மு.க.ஸ்டாலின் மிக ஆவேசமாக சாடியுள்ளார். இவரின் இந்த ட்வீட் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
காலையில் அனுப்பிய ஃபைலை மாலைக்குள் கையெழுத்திடும் முதல்வர் விஜய்.. அதிகாரிகள் ஆச்சரியம்...