டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்கக்கூடாது!.. தமிழக அரசு அதிரடி!...
தனியார் வசம் இருந்து மதுபான கடைகளை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா டாஸ்மாக் என்கிற நிறுவனத்தை தொடங்கி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருவாயும் கிடைத்து வருகிறது. அதேநேரம் டாஸ்மாக் கடைகள் மட்டும் பார்களில் பல முறைகேடுகள் நடப்பதாக மதுப்பிரியர்கள் தொடர்ந்து புகார் கூறிவருகிறார்கள்.
குறிப்பாக பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்குகிறார்கள், டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் பீடி, சிகரெட், தண்ணீர் பாட்டிகள் மற்றும் சைடிஷ் என சொல்லப்படும் உணவு பொருட்கள் மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் டாஸ்மாக்கில் உள்ள குறைகளை கொஞ்சம் கொஞ்சமாக நிவர்த்தி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.,
இந்நிலையில், டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது, குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே பார்கள் செயல்பட வேண்டும், பார்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் தமிழக முழுவதும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
அதேபோல் பார்களில் விற்கப்படும் தின்பண்டங்களை அதிக விலைக்கு விற்கக் கூடாது எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதை பார் நடத்துபவர்கள் பின்பற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.