கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...
தாரபுரத்தில் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று தாராபுத்தில் ரோட் ஷோ நடத்தினார். தாராபுரத்தின் அனைத்து கிராமங்களுக்கும் அவர் நேரில் சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்ற விஜய் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்திற்கு சென்றார்.
தாராபுரத்திற்கு செல்ல விஜய் பயன்படுத்திய VT-BST ஹெலிகாப்டர் Agusta A109S Grand (Leonardo Aw109) ரக ஹெலிகாப்டர் ஆகும். இரட்டை என்ஜின் கொண்ட இந்த இலகு ரக ஹெலிகாப்டர் மணிக்கு 260 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும். இதில் 6 முதல் 8 பேர் வரை பயணிக்க முடியும்.. 3,175 கிலோ எடை வரை சுமந்து செல்லும். 575 லிட்டர் வரை எரிபொருள் கொள்ளளவு கொண்டது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதே Agusta A109S Grand ரக ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை என சொல்லப்படுகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதே Agusta A109S Grand ரக ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை என சொல்லப்படுகிறது.