என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..
தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பற்றி பேசிய முக ஸ்டாலின் பாமாவுக்கு இன்னொரு பெயர் உண்டு.. பெட்டி பாமா.. பல்டி பாமா. இந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி அவர் பல்டி அடித்தார் என்று தெரியவில்லை என உருவ கேலி செய்யும் விதமாக பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கம்யூனிஸ்ட் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
இந்நிலையில், இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த முதல்வர் விஜய் மக்கள் முன் பேசிய போது நம் சகோதரி சத்யபாமாவை பற்றி என்னா பேச்சு பேசிட்டு போயிருக்கார்.. அதை காது கொடுத்து கேட்க முடியல.. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்.. நான் தாங்கிக் கொள்கிறேன்.. ஆனால் நம் சகோதரி, அம்மா, தங்கை பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன் என கோபமாக பேசினார்.
மேலும் பயம் காரணமாகத்தான் நான் மக்களை சந்திக்க வருவதாக திமுகவினர் பேசுகிறார்கள்.. அட பாவிகளா!.. தேர்தலுக்காக அல்ல எப்போது வேண்டுமானாலும் மக்களை பார்க்க நான் வருவேன்.. நான் எத்தனை முறை மக்களை பார்க்க வந்தால் உங்களுக்கென்ன? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.