1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay Meets PM Modi in Delhi to Discuss State Needs

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

முதல்வர் விஜய்
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தேவைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு இந்த சந்திப்பு நடந்ததாக இந்தியா டுடே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
 
இச்சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிலுவையில் உள்ள பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
 
முதலமைச்சரின் கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்ட பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார். 
 
ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாத முதலமைச்சர் விஜய்யின் செயல்பாட்டை, அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
 
தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி தேசியத் தலைவர்களுடன் சுமுகமான உறவை பேணுவது, மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பெரும் வலுசேர்க்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் விஜய் காட்டும் இந்த முனைப்பு, தமிழகத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
10 நிமிடங்கள் மட்டுமே விஜயை சந்தித்த மோடி!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?!..