1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk government planning tasmac to private

2500 டாஸ்மாக் கடைகள் தனியாரிடம் செல்கிறதா?!.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!...

vijay tasmac
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ் ‘ரெஸ்டோ பார், தனியார் மயம் ஆக்குவது ஆகியவை குறித்து ஆலோசித்து வருகிறோம்..

இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ எனக்கூறினார். இந்நிலையில் முதல் கட்டமாக 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்ற தவெக அரசு தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் கட்டமாக நகரப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மது பழக்கத்தை மேலும் அதிகரிக்கும்.. 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்றும் முடிவு செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அரசே மது விற்பனை செய்கிறது என்று அவமானத்தை போக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞர் கைது...