1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vjay formed a new team

தமிழக வருவாயை அதிகரிக்க புதிய டீம்!.. முதல்வர் விஜய் அதிரடி!...

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் இது பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக, திமுக இல்லாமல் ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது.

தமிழக முதல்வர் சி.ஜோசப்பை பொறுத்தவரை ஊழல், லஞ்சம் இல்லாத ஒரு நல்ல ஆட்சி அமைக்கவேண்டும் என முதல்வர் விஜய் விரும்புகிறார். பேசும் மேடைகளில் எல்லாம் இதுபற்றி அவர் தொடர்ந்து பேசி வருகிறார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் அதற்கு முதல் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுவதில்லை.

முதல்வர் விஜயை பொறுத்தவரை எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு செயலில் பதில் சொல்லவேண்டும் என்று அவர் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் தமிழகத்தின் வருவாயை பெருக்குவதற்கான ஒரு புதிய குழுவை முதல்வர் விஜய் அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் வருவாயை பெருகுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்க பொருளாதார நிபுணரும், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணை தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தமையில் இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

வருவாய் கசிவுகளை தடுத்து வரி வசூலை மேம்படுத்தி புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியும் நோக்கத்தில் இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதங்களில் பரிந்துரைகள் மற்றும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருவண்ணாமலயில் கிரிவலம் சுற்றுவதற்கு நான்தான் காரணம்னு சொன்னாங்க - இளையராஜா