1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk general secratary warning tvk incident

தவெக நிர்வாகி பிறந்தநாள் அலப்பறை!.. எச்சரித்த புஸ்ஸி ஆனந்த்!...

tvk
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தூங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஒரு புதிய சக்தியாக பார்க்கப்படுகிறது. தவெக தனியாக போட்டுட்டாலே 18 சதவீத வாக்குகளை பெறும் என காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சமீபத்தில் கூறினார். மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு தேசிய தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தபோது வருகிற தேர்தலில் தவெக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறினார்..

இப்படி பாசிட்டிவான விஷயங்கள் தவெகவுக்கு நடந்தாலும் ஒருபக்கம் நெகட்டிவ்வான விஷயங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், வந்தவாசி தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினர். அதையொட்டி ஒரு ஜீப்பில் கையில் வாளை வைத்துக்கொண்டு அவர் வலம் பெற அவரை சுத்தி 50க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வர சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அவர்கள் ரோட் ஷோ நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்..

இது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வழியாக பலரும் தவெகவினரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். குறிப்பாக ‘இன்னும் ஆட்சிக்கு வரவில்லை.. அதற்குள் இவ்வளவு அலப்பறையா?.. கட்சி தலைமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றெல்லாம் பலரும் கோரிக்கை வைத்தார்கள்..

இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தவெக நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார்.

Pic courtesy to Puthiyathalaimurai
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த தேர்தல் எங்களுக்கு செம ஈசி!.. ஜுஜூபி!.. மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!...