1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin said 2026 election will be easy

இந்த தேர்தல் எங்களுக்கு செம ஈசி!.. ஜுஜூபி!.. மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!...

mk stalin
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை தேர்தல் பணிகளில் வேகமாக செயல்பட தொடங்கியிருக்கிறது.
அதிமுகவை பொருத்தவரை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது.

திமுக வழக்கம் போல் விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. அதே நேரம் வழக்கமாக திமுகவுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ் கட்சி இந்த முறை என்னவாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கேட்க அதை திமுக நிராகரித்துவிட்டது. அதேநேரம், திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார். விரைவில் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை துவங்கவிருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை இந்தியா டுடே கருத்தரங்களில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ‘2026 சட்டமன்றத் தேர்தலை விட இந்த தேர்தல் எங்களுக்கு கடினமாக இருக்காது.. நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம்.. அவற்றை அவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகள் கேட்போம்.. மக்களும் எங்களுக்கு வாக்களிப்பார்கள்’
என சொல்லியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
டொனால்டு டிரம்ப் குறித்து ஆக்ரோஷமான விவாதம்.. மகளை சுட்டு கொலை செய்த தந்தை..!