இது நம்ம திருச்செந்தூர் தானா? குறுக்கு வழியில் தரிசனத்திற்கு கூட்டி செல்லும் ஒரு புரோக்கரையும் காணோம்...!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் இங்கு வரும் பொதுமக்களிடம், கட்டண தரிசனம் மற்றும் விஐபி தரிசனம் என்ற பெயரில் குறுக்கு வழியில் விரைவாக கூட்டிச் செல்வதாக கூறி புரோக்கர்கள் பெருமளவில் பணம் பறித்து வந்தனர். இதனால் சாதாரண ஏழை எளிய பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடக்கும் அவல நிலை நீடித்து வந்தது.
இந்த ஆன்மீக சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் அண்மையில் திருச்செந்தூர் கோவிலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு, கோவிலை சுற்றி திரிந்த புரோக்கர்கள் அனைவரும் அப்படியே காணாமல் போயுள்ளனர். இடைத்தரகர்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதால், தற்போது பக்தர்கள் அனைவரும் எவ்வித பாகுபாடும் இன்றி, அமைதியான முறையில் வரிசையில் நின்று நிம்மதியாகச் சாமி கும்பிட்டுச் செல்கின்றனர்.
"இது நம்ம திருச்செந்தூர் தானா?" என்று வியக்கும் அளவிற்கு தற்போதைய ஆன்மீக நிர்வாகம் மாறியுள்ளது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் சமமான ஆன்மீக சூழலை உருவாக்கி கொடுத்துள்ள தற்போதைய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைதான் மக்கள் எதிர்பார்த்த உண்மையான மாற்றம் என்று பக்தர்கள் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Edited by Siva
Congratulations @RameshOffcl you have made this possible ???? pic.twitter.com/xq8opPV7Db
— Rajasekar (@sekartweets) June 3, 2026
அடுத்த கட்டுரையில்
