தொடர்புடைய செய்திகள்
- கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த புகார்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா..!
- கள்ளக்காதலை பார்த்துவிட்ட 5 வயது மகனை கொலை செய்த தாய்.. நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!
- கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?
- மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!
- மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!
34 ஆண்டுக்கு முந்தைய கொலை வழக்கு.. 84 வயது முதியவருக்கு சிறை தண்டனை.. கைத்தாங்கலாக அழைத்து சென்ற காட்சி...
பீகார் மாநிலத்தில் சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், வைஷாலி நீதிமன்றம் தற்போது அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், நீண்ட கால விசாரணைக்கு பிறகு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான, தற்போது 85 வயதான முதியவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடுகளைக் காரணம் காட்டி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு பாடமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும், இதே வழக்கில் தொடர்புடைய மற்ற 4 குற்றவாளிகளுக்கும் தலா 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், காலம் கடந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதும், குற்றம் செய்தவர்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பதும் இத்தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் 84 வயது முதியவரை கைத்தாங்களாக சிறைக்கு அழைத்து சென்ற காட்சி அனைவரையும் உருக்கும் வகையில் உள்ளது.
Edited by Siva
