அடிச்சது நாங்க இல்ல.. பப்ளிக்தான்!.. தவெக குற்றச்சாட்டை மறுக்கும் சேகர் பாபு!..
நேற்று சென்னை துறைமுகம் பகுதியில் தவெகவை சேர்ந்த 5 பேர் பிரச்சாரம் செய்த போது ரவுடிகள் அவர்களை தாக்கியதாகவும் துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபுதான் அதற்கு காரணம், அவரின் தூண்டுதலில் பேரிலேயே நூற்றுக்கு மேற்பட்ட ரவுடிகள் தவெக நிர்வாகிகளை தாக்கியிருக்கிறார்கள்.. அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..
அமைச்சர் சேகர் பாபு ஒரு ரவுடியை போல செயல்படுகிறார்.. துறைமுகம் பகுதியில் ஆய்வுக்கு செல்லும் தவெக நிர்வாகிகளை மிரட்டுகிறார் என தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் புகார் கூறினார்கள். மேலும், தவெக தலைவர் விஜயும் டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் இந்த புகாரை அமைச்சர் சேகர்பாபு மறுத்திருக்கிறார்.. மக்களுக்கும் அந்த கட்சியினருக்கும் இடையேதான் மோதல் ஏற்பட்டது. நீங்கள் அந்த கட்சிக்காரர்கள் சொல்வதை மட்டுமே கேட்கிறீர்கள்.. ஆனால் பொது மக்கள் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.. அதுபற்றி யாரும் செய்தி போடுவதில்லை என்று பேசியிருக்கிறார்..
இதை மறுத்துள்ள தவெக தரப்பு எங்கள் நிர்வாகிகளை ரவுடிகளை அனுப்பி தாக்க சொன்னது அமைச்சர் சேகர் பாபுதான்.. ஆனால் மக்களுக்கும் எங்களுக்கும் சண்டை என்பது போல ஒரு பொய்யான தகவல்களை சொல்கிறார் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்..