தொடர்புடைய செய்திகள்
- இது நம்ம திருச்செந்தூர் தானா? குறுக்கு வழியில் தரிசனத்திற்கு கூட்டி செல்லும் ஒரு புரோக்கரையும் காணோம்...!
- மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையையே பாஜக முடிச்சிடுச்சு.. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை விஜய் முடிச்சிட்டாரு.. நாடு சுத்தமாகி கொண்டு வருகிறது.. அரசியல் விமர்சகர்கள்
- போலீஸ் எப்பவுமே நல்லவங்க தான்.. அரசியல்வாதிங்க அவங்களை கட்டுப்படுத்துறாங்க: பொதுமக்கள் கருத்து
- ‘கருப்பு’ படத்தில் விஜய் நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும்: எடிட்டர் கலைவாணன்..
- சட்டசபையில் சைலண்ட்!.. திருச்சியில் துள்ளுகிறார்!.. விஜயை தாக்கிய ஆ.ராசா!...
அரசு பள்ளி ஷோகேஸில் பீர் பாட்டில்.. ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ அதிர்ச்சி..
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடி ஷோகேஸில் 'ஸ்வீட் பீர்' எனப்படும் மதுபாட்டில் வடிவிலான மிட்டாய்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய தலைமை ஆசிரியரின் அறையிலேயே, மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வடிவிலான இத்தகைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ உடனடியாக கடும் அதிர்ப்தியை வெளிப்படுத்தினார்.
இதைப் பார்த்த காமாட்சி மற்றும் அதிகாரிகள், கல்வி கற்கும் புனிதமான ஒரு வளாகத்தில், அதுவும் தலைமை ஆசிரியர் அறையில் இதுபோன்ற காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டு இருப்பது மாணவர்களின் எதிர்காலச் சிந்தனையைப் சீரழிக்கும் என்று சுட்டிக்காட்டினர். மேலும், அந்த ஷோகேஸில் இருந்த 'ஸ்வீட் பீர்' பாட்டில்களை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
