ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலையின் பின்னணியில் சதியா? பல வருட திட்டமா?
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் படுகொலை, தற்செயலான விபத்து அல்ல; அது பல ஆண்டுகால திட்டமிடல் மற்றும் நவீன தொழில்நுட்ப துரோகத்தின் உச்சம் என கூறப்படுகிறது.
'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், தெஹ்ரானின் போக்குவரத்து கேமராக்கள் முதல் மெய்க்காப்பாளர்களின் செல்போன்கள் வரை அனைத்தும் ஹேக் செய்யப்பட்டன. குறிப்பாக, தொழுகை நேரத்தை நினைவூட்டும் செயலி மூலம் தவறான தகவல்களை பரப்பி பாதுகாப்பு வளையத்தை சிதைத்தது மொசாட் அமைப்பு.
தலைமை இல்லத்தின் நிலத்தடி பதுங்கு குழியில் காமேனி மறைந்திருந்த ஐந்தே நிமிடங்களில், சிஐஏ உளவாளியின் துல்லியமான தகவலால் 'பிளாக் ஸ்பாரோ' ஏவுகணைகள் அவரை தாக்கி கொலை செய்தன.
கோடிக்கணக்கான டாலர்கள் செலவிடப்பட்ட இந்த சதிவலையில், செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் சைபர் போர்முறை இணைந்து ஈரானின் பல அடுக்கு பாதுகாப்பை சுக்குநூறாக்கியது. காமேனியின் மறைவிற்கு பிறகு அவரது மகன் மொஜ்தபா தலைவராக அறிவிக்கப்பட்டாலும், ஈரானின் ஆதிக்கம் தற்போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இது நவீன காலத்து 'நிழல் போர்' முறையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
Edited by Siva
