டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு.. 6,574 காலியிடங்கள்.. விண்ணப்பம் செய்வது எப்படி? எந்த இணையதளம்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு தேர்வர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப்-4 தேர்வின் கீழ் காலியாக உள்ள 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு பணியை கனவாகக் கொண்டு பயின்று வரும் தமிழக இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குரூப்-4 தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகையான பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 6 முதல் நவம்பர் 5-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜனவரி 10, 2027 அன்று நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களான [http://tnpsc.gov.in](http://tnpsc.gov.in) மற்றும் [http://tnpscexams.in](http://tnpscexams.in) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
கடைசி நேரப் பதற்றத்தை தவிர்க்க, தகுதியான விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பித்து, எழுத்து தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

