தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. யாருக்கு வெற்றி? முடிவு தந்த ஆச்சரியம்..
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்கள் அமைந்துள்ளன. இதுவரை திராவிட கை ஓங்கியிருந்த தேர்தல் களத்தின் பழைய சமன்பாடுகளை உடைத்து, தமிழக வெற்றிக் கழகம் இரு தொகுதிகளிலும் அசைக்க முடியாத வரலாற்று வெற்றியை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறது.
கள நிலவரங்களின்படி, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் சுமார் 15,000 முதல் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தாராபுரம் தொகுதியிலும் 5,000 முதல் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. திராவிடக் கட்சிகளின் பண பலம், அதிகார பலம் மற்றும் கூட்டணிப் பலம் அனைத்தையும் தகர்த்தெறிந்து, 'விசில்' சின்னத்திற்கு மக்கள் தங்களது பேராதரவை வழங்கியுள்ளனர்.
பாரம்பரிய அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ள வாக்காளர்கள், விஜய் முன்வைத்த தூய்மையான மாற்று அரசியலை முழுமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். திராவிட மட்டுமே சாதகமாக அமையும் என்ற இடைத்தேர்தல் வரலாற்றை மாற்றி எழுதி, தவெக படைக்கப்போகும் இந்த அபார வெற்றி, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தம் உதயமாகப் போவதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

