1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC Group 4 Exam Notification to be Released Tomorrow; Exam Scheduled for December 20

தவெக ஆட்சியில் முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அறிவிப்பு.. நாளை வெளியாகிறது...

டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதாவது டிஎன்பிஎஸ்சி 2026-ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை செவ்வாய்க்கிழமை அக்டோபர் 6 அன்று வெளியாகிறது. 
 
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.   டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் வருடாந்திரத் தேர்வு அட்டவணையின்படி, திட்டமிடப்பட்ட 6 தேர்வுகளில் குரூப் 1, 2, 2ஏ உள்ளிட்ட 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 
 
இதன் தொடர்ச்சியாக, அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு அக்டோபர் 6 அன்று வெளியாகவுள்ள நிலையில், இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 
கடந்த 2024-ஆம் ஆண்டில் 4,662 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 10,000 காலிப் பணியிடங்கள் வரை நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.   
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் தாமதம்..