1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Last Chance to Apply for TNPSC Group-1 Exam Today

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு.. விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 1
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் நல உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
 
 இதற்கான விண்ணப்பங்களை தகுதியான விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விண்ணப்பிக்க இன்று (ஜூலை 29) கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
கடைசி நேரத்தில் இணையதளத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தகுதியானவர்கள் முன்கூட்டியே விண்ணப்பப் பணிகளை நிறைவு செய்வது நல்லது என்று தேர்வாணையம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுக ஆட்சியில் போடப்பட்ட இன்னொரு டெண்டர் ரத்து... நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு