1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn speaker jdc prabakar condemn nirmalkumar

தேவையானதை மட்டும் பேசுங்க!.. சி.டி.நிர்மல் குமாரை கண்டித்த சபாநாயகர்!...

ct nirmalkumar
இன்று சட்டசபை கூட்டம் துவங்கியதும் கர்நாடக வனத்துறை 3 தமிழர்களை சுட்டுக்கொன்ற விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுத்திருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், கர்நாடக வனத்துறையின் பதிலை எற்க முடியாது. தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் தமிழக முதல்வர் முதல் ஆளாக குரல் கொடுப்பார்’ என பேசினார்.

தொடர்ந்து பேசிய நிர்மல்குமர் ‘சிலருக்கு திடீர் தமிழ் பாசம் இருக்கும். வரலாற்றை பார்த்தால் அது தெரியும்’ என சொல்லி 2009ம் வருடம் கலைஞர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரத போராட்டம் பற்றி ஒரு கருத்தை கூறினார்.

இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் பிரபாகர் ‘தேவையற்ற கருத்துக்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறேன். இனிமேல் தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன். உங்கள் கருத்து கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக மட்டுமே இருக்கவேண்டும். யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்?’ என நிர்மல்குமாரை கண்டித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை!.. ஐ.நா சபை கோரிக்கை!...