பட்ஜெட் அனுமதி வாங்காமல் 2000 கோடி ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!...
கடந்த திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக கூறி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு எப்படி திமுக மீது குற்றச்சாட்டுகளை கூறி பிரச்சாரம் செய்தாரோ அதுபோலவே சட்டசபையிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார்.
அதுவும் நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன், டாஸ்மாக் ஊழல், செந்தில் பாலாஜி, கரூர் கேங், கட்சி நிதி என்கிற பெயரில் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு சென்ற பணம் என பலவற்றையும் பேசினார். கடந்த ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட பலவற்றையும் விஜய் பேசியிருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது..
ஆனால், அவையெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள்தானே தவிர நிருபிக்கப்படவில்லை என திமுக கூறுகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என்று நம்பி எதிர்கால பட்ஜெட் என ரூ 2.000 கோடி முறைகேடு செய்திருக்கிறார்கள்.. 80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே 2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு.. பட்ஜெட் அனுமதி இல்லாமல் கடந்த ஜனவரி 14-ம் தேதி அரசாணை மூலம் 2026-27ம் வருடம் பணிகளுக்கு 2 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருக்கிறார்.