1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay asked not to mistake about his behaviour

என்னோட பாடி லாங்வேஜ்ல உள்நோக்கம் இல்லை!.. தப்பா எடுத்துக்காதீங்க!.. விஜய் டிவிட்!...

vijay
சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் விஜய் சர்காரியா கமிஷனரில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, அவரின் மருமகன் முரசொலி மாறன் ஆகியோரை பற்றி குறிப்பிட்டிருந்த ஊழல், வீராணம் குடிநீர் திட்டத்தில் முரசொலி மாறன் 2.5 சதவீதம் லஞ்சம் கேட்டார் என குறிப்பிடப்பட்டிந்ததாக பேசினார்.

அதேபோல் ‘எதற்கெடுத்தாலும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்.. மிசாவை பார்த்தவர்கள் என திமுக சொல்கிறது.. ஆனால் உண்மையில் மிசா காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்’ என்று சொல்லிவிட்டு கையை தாடைக்கு அருகே வைத்து காட்டினார். அதாவது மிசா காலத்தில் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது போலீஸார் தாக்கியதில் அவரின் தடை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தான் முதல்வர் விஜய் நக்கலடித்தார் என பலரும் புரிந்து கொண்டனர்..

இதை திமுகவினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினரும் கடுமையாக கண்டித்தனர்.. சமூக வலைதளங்களில் பலரும் ‘ஒரு முதலமைச்சர் இப்படி பேசக்கூடாது’  என கடுமையான எதிர்வினை ஆற்றினர்.

இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய் ‘சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட் அனுமதி வாங்காமல் 2000 கோடி ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!...