தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...
கடந்த திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்தது. அதை திமுகவும் எதிர்க்கவில்லை. ஆனால் அங்கு விமான நிலையம் கட்டக்கூடாது எனக் கூறி உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தவெக ஆட்சி அமைந்துவிட்ட நிலையில் ஒன்றிய அரசு பரந்தூரில் விமான நிலையம் கட்டும் முயற்சியில் இறங்கியது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.
இதனால் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை பாதிக்கப்படுவதாக கூறி ஏகனாபுராம் உள்ளிட்ட கிராம மக்கள் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பரந்தூருக்கு பதிலாக வேறொரு மாற்று இடத்தை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.
இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு தளபதி விஜய் சாலை என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கிராம சபையில் ஒருமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.