1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt Withdraws PPP Solid Waste Management Tender Following Opposition Protest

தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் திட்டம் ரத்து.. வாபஸ் பெற்றது தமிழக அரசு..

cm vijay
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் பொது-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 
முன்னதாக, குப்பைகளை மேலாண்மை செய்யும் இந்த தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. தூய்மைப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், பொதுச் சேவைகள் தனியார் வசம் செல்வது மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வந்தன.
 
எதிர்க்கட்சிகளின் இந்தத் தீவிரமான மற்றும் தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, தற்போது அந்த டெண்டரை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
அரசின் இந்தத் திடீர் பின்வாங்கல், எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படும் அதே வேளையில், மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகள் வழக்கம் போல் அரசு நிர்வாகத்தின் கீழேயே நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏக்கள்?.. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா மதிமுக?!..