1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mdmk may quit from dmk alliance soon

ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏக்கள்?.. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா மதிமுக?!..

stalin vaiko
கடந்த பல தேர்தல்களாகவே திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்று வருகிறது. ஆனால் மதிமுகவை அதன் தனி சின்னத்தோடு போட்டியிட விடாமல் தங்களின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட நிர்பந்தம் செய்து வருகிறது திமுக. நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டனர்.

அதில் கடையநல்லூரில் ராஜேந்திரன் மற்றும் சீர்காழியில் செந்தில் செல்வன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். அதாவது தற்போது மதிமுகவுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஒருபக்கம் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் இணைந்து விட்டன. ஆனால் அந்த வாய்ப்பு மதிமுகவுக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்களும் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர்..

கடந்த சில நாட்களாகவே வைகோவும், அவரின் மகன் துரை வைகோவும் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தவறான முடிவை எடுத்து விட்டோம்.. அவமானப்படுத்தப்பட்டோம் என  தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எனவே, திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விரைவில் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான், சென்னை எழும்பூரில் மதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், வைகோ, துரை வைகோ உட்பட 18 உயர் நிலைக்குழு நிர்வாகிகள் பங்கேற்ற்றுள்ளனர். இதில், மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதா? வேண்டாமா? என விவாதிக்கப்பட்டு வருகிறது. நாளை மதிமுக கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.