தொடர்புடைய செய்திகள்
- பள்ளிகளுக்குள் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.. தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மேயர் பிரியா
- சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை இனி வாட்ஸ்அப் மூலமே செலுத்தலாம்!
- சென்னையில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுயவிவரப் பதிவு ஜூலை 17 முதல் தொடக்கம்!
- சென்னை மேயர், துணை மேயர் உள்பட 157 பேர் சொத்துக்கணக்கை காட்டவில்லை.. அதிர்ச்சி தகவல்...!
- ஜப்பான் சுற்றுலா பயணியின் புகார்.. ஒருசில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி.. இதுதான் தவெக ஆட்சி...!
சென்னை மாநகராட்சி அதிரடி: ரூ.284 கோடி மதிப்புள்ள நடைபாதை டெண்டர்கள் ரத்து!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபாதைகள் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.284 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட திட்டத்தின் டெண்டர்களை பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்துள்ளது.
முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் கோரப்பட்ட இந்த டெண்டர்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் நடைபாதைகளை அமைக்க 35 பேக்கேஜ்களாக டெண்டர்கள் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால், திட்ட மதிப்பீட்டை விட நான்கு மடங்கு வரை கூடுதல் செலவீனங்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாதகமாக டெண்டர்கள் முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டது , தேவையில்லாத கூடுதல் உதிரிபாகங்களை விரிவான திட்ட அறிக்கையில் சேர்த்தது போன்ற பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் இந்த முறைகேடான கூட்டு, அரசு கஜானாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என தற்போதைய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இந்த திட்டம் முழுமையாக கைவிடப்படாது என்றும், திட்ட அறிக்கை மீண்டும் முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு, சரியான மதிப்பீட்டுடன் புதிய டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
