கட்சி நிதி பேரில் வருடத்திற்கு 1200 கோடி!.. டாஸ்மாக்கில் நடந்த கொள்ளை!..
தமிழகத்தில் தற்போது 4787 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சர் பதவியேற்றவுடன் 717 கடைகள் மூடப்பட்டது. ஒரு பக்கம் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. இந்நிலையில்தான் தமிழக முதல்வர் விஜய் எடுத்த நடவடிக்கை அதிரடி நடவடிக்கையின் காரணமாக தமிழக அரசுக்கு கூடுதலாக 1200 கோடி வருவாய் கிடைக்கவிருக்கிறது.
அதாவது பிராண்டி விஸ்கி, பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூட் 90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் 100 கோடி வசூல் செய்து வந்துள்ளனர். அதாவது இந்த தொகை தமிழக அரசுக்கு வர வேண்டிய தொகை. அது அரசு கணக்கில் வரவில்லை.
தற்போது இந்த தொகை நேரடியாக அரசு கணக்கில் சேர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய நடைமுறையால் மாதம் ரூ.100 கோடி என வருடத்திற்கு1200 கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
