1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac Reform: CM Vijay Orders 51 Crore Monthly Commission Redirected to Government Treasury

மதுபானங்கள் வழங்கும் ஆலைகளுக்கு கூடுதல் வரி.. ரூ.1000 கோடி தமிழக அரசுக்கு வருமானம்..!

டாஸ்மாக் கமிஷன் ஒழிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவி வந்த கமிஷன் கலாச்சாரத்தை ஒழித்து, அந்த வருவாயை அரசு கஜானாவிற்கு மாற்ற முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
முந்தைய ஆட்சிக் காலங்களில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் ஆலைகள் மூலம் மாதந்தோறும் 51 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கமிஷன் தனிநபர்களுக்கு சென்றது தெரியவந்துள்ளது. ஒரு முன்னணி நாளிதழில் வெளியான இந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் இந்த கமிஷன் தொகையை இனி வரியாக மாற்றி அரசு கஜானாவில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், மதுபான பெட்டிக்கு 90 ரூபாயும், ஒயின் வகைக்கு 20 ரூபாயும் வீதம் கூடுதல் கட்டணமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 
1983-ல் சத்துணவுத் திட்டத்திற்காகத் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை, பிற்காலத்தில் கட்சி நிதியாகவும் தனிநபர் கமிஷனாகவும் மாறியது. தற்போது இத்தொகை அரசு கஜானாவிற்குத் திருப்பப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானங்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. 
 
இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கை மூலமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதல் வருவாயாக 1,000 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த வெளிப்படையான வரிவிதிப்பு முறை பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சாமியே எங்க ஊருக்குள்ள வந்த மாதிரி இருக்குது.. 56 வருடங்களாக பஸ் இல்லாத கிராமத்தில் இன்று ஓடுது பஸ்.. இதுதாண்டா மாற்றம்...