விஜய் பிரெஸ்ஸ மீட் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கா?!.. கோபப்பட்ட சிடி நிர்மல்குமார்!..
தமிழக முதல்வர் விஜய் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர். எங்கும், யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அவர் ஒரு தனிமை விரும்பி. இதை ஆங்கிலத்தில் Introvert என சொல்வார்கள். நடிகராக இருந்தபோதே அவர் அப்படித்தான் இருந்தார். அதேநேரம் அரசியலுக்கு வந்தால் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டதால் தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும் குரலை உயர்த்தி மிகவும் ஆவேசமாக திமுகவை விமர்சித்து பேசினார் விஜய். அதன் விளைவாகவே அவருக்கு மக்கள் வாக்களித்தனர்..
அதேநேரம் பிரச்சார வாகனத்தின் மீது நின்று ஆவேசமாக பேசும் விஜய் சட்டசபையில் மிகவும் அமைதியாக இருக்கிறார். அங்கு அவர் அதிகம் பேசுவதில்லை. தலைமைச் செயலகத்திலும் ஒரு அரசு அதிகாரி போல வந்து விட்டு சென்று விடுகிறார். குறிப்பாக அவர் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை. சமீபத்தில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றபோது கூட அவர் அங்கு செய்தியாளர் சந்தித்து பேசவில்லை. இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இந்நிலையில், முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் எப்போது தேவையோ அப்போது முதல்வர் செய்தியாளர்களை சந்தித்ப்பார். அவர் தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருகிறார்.. செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை.. செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Bench Mark Fix பண்ணாதீங்க என்று கூறியிருக்கிறார்.
