1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt plans to use meachine to get back bottles

பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்!. பாட்டிலுக்கு 10 ரூபா சிக்கலுக்கு தீர்வு!..

tasmac
தவெக ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகள் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழக முதல்வர் விஜய் அவர் முதல்வராக பதவியேற்றவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். தற்போது அந்த கடைகள் மூடப்பட்டு விட்டது. ஒரு பக்கம் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்க கூடாது எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து பாட்டிலை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடும் படி டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்து போராட்டமும் நடத்தினர். இந்நிலையில்தான், பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக மதுபான கடைகளில் பாட்டிலை திரும்ப பெற தானியங்கி இயந்திரத்தை வைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. சோதனை முறையில் எழும்பூரில் உள்ள மதுபான கடையில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி காலி பாட்டில்களை பெற்று வருகின்றனர்..

பாட்டிலில் உள்ள லேபிளை ஸ்கேன் செய்து விட்டு உள்ளே போட்டால் அதற்கான தொகை தானிய இயந்திரம் மூலம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
கேரளா முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் தொடக்கம்: தமிழ்நாட்டில் எப்போது?