1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. netizens are angry with raghava lawrence talk

தெரு நாயும் மக்களும் ஒன்னா?!.. சர்ச்சையான ராகவா லாரன்ஸ் பேச்சு!...

ragava lawrence
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருபவர் ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தபோது அந்த கட்சியில் இணைய ஆசைப்பட்டார். ஆனால் அப்போது என்னுடைய அம்மா என்னை அனுமதிக்கவில்லை என்று சமீபத்தில் வீடியோ ஒன்றில் லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

மேலும் விஜயின் தவெக ஆட்சியை தொடர்ந்து பாராட்டி வரும் ராகவா லாரன்ஸ் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ் பேசிய போது ‘ தவெக ஆதரவாளர்களை தற்குறிகள் என்று சொல்கிறார்கள்.. அவர்கள் தற்குறிகள் அல்ல.. அவர்கள் தவெகவின் அம்புக்குறி. தவெகவை பாராட்டி நிறைய பேசியிருக்கிறேன். இப்போது என்னையும் விமர்சிப்பார்கள்.. களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நானும் தயாராக இருக்கிறேன்.. பொறாமை காரணமாக எதிர்கட்சிகள் தவெகவை விமர்சனம் செய்கின்றன. தமிழக அரசின் ஒரு மாத கால அரசியல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. கோயில்கள், பள்ளிகள் அருகில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சர் செயல்பாடுகள் என்னை கவர்ந்திருக்கிறது’என்று அவர் கூறியிருக்கிறார்..

மேலும் ‘தெரு நாய்களுக்கு கூட அவைகளுக்கு பிடித்த உணவைத்தான் கொடுக்க வேண்டும். அதேபோல், மக்களுக்கு தேவையானதை அறிந்து செய்ய கால அவகாசம் தேவை’ என்று ராகவா லாரன்ஸ் பேசினார்.. இதையடுத்து தமிழ்நாட்டு மக்களும் தெருநாயும் ஒன்றா?’ என சிலர் அவரை சமூக வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள்
.
அடுத்த கட்டுரையில்
ஹார்ட் பீட் 3யில் எனது கேரக்டரின் சுவராஸ்யம்.. சின்னத்திரை நவரச நாயகி சஞ்சனா