1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay warning to tvk ministers today

எதிலும் அமைச்சர்கள் தலையிடக்கூடாது!.. ஐயம் வாட்ச்சிங்!.. விஜய் வார்னிங்...

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழல் செய்த திமுக முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். அதில், அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்து கே.என்.நேரு கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் சில முடிவுகள் சில விமர்சனங்களை பெற்றாலும் இதுபோன்ற நடவடிக்கைகளும், சில திட்டங்கலும் மக்களிடம் வரவேற்பை பெற்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில்தான், இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள், ஊழியர்களின் பணியிட மாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர்கள் தலையிடக்கூடாது என விஜய் கராராக கூறினாராம். மேலும், அமைச்சர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், துறை அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதாக கூறிய முதலமைச்சர் அறிவுறுத்தலை மீறி நடந்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறாராம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....